சென்னை: நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நாவலர் நெடுஞ்செழியன், அவருடைய இறுதிமூச்சு வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத்தலைவராக இருந்தார்.
அதுமட்டுமின்றி, எம்ஜிஆர் அமைச்சரவையிலும், அம்மா அவர்களின் அமைச்சரவையிலும், நிதித்துறை அமைச்சரா திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணா மறைந்தபோதும்,ல எம்ஜிஆர் மறைந்தபோதும், இடைக்கால முதல்வராக பதவி வகித்த சிறப்புக்குரியவர்.
இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட நாவலர் இரா, நெடுஞ்செழியன் அவர்களை சிறப்பிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முழு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்பதையும், அவரது பிறந்தநாளான ஜூலை 11ம் நாளை, அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.