டெல்லி:
து நேரடியாக விற்பனை செய்வதை மாநில அரசுகள் தவிர்க்கவேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது குறித்து பரிசிலீக்க வேண்டும் என்று  உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு கடந்த 4ந்தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில மதுபானக் கடைகளிலும்  குடி மகன்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஒருவேளை உணவுக்கே கையேந்திய பலர் மதுக்கடைகளில் மதுவாங்கி குடித்த அவலங்களும் அரங்கேறின.
இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்த நிலையில்,   கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.
மனுவை காணொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள், “மது விற்பனையை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது. மேலும் மதுவை ஆன்லைனில் விற்பனை அல்லது டோர் டெலிவரி செய்வது குறித்து மாநிலங்கள் பரசீலிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டது.