ராமண்ணா வியூவ்ஸ்
ramana
 
ரசு பேக்குவரத்து கழக்கத்தில் பணியாற்றும் தோழர் அவர். தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்படுவபவர்.  அவர் அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது:
“அரசுப் போக்குவரத்துக் கழகத்தை இழுத்து மூடிட்டு, முழுக்க தனியார் மயமாக்கிடணும்!” – இதுதான் அவர் சொன்ன வார்த்தைகள்.
“என்ன சார் ஆச்சு” என்றேன்.
“ரொம்ப நாளாவே இந்த எண்ணம் என் மனசுக்குள்ள இருக்கு. பேருந்து வாங்குவது, அதற்கான உதிரி பாகங்கள் வாங்குவது.. எல்லாத்திலும் கமிசன். அதனால தரமான பேருந்துகள் வர்றதில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு முன்னாலேயே டேமேஜ் ஆயிடுது. அடிக்கடி ரிப்பேர் ஆகி பணி மனையில கிடக்குது. டிரைவர் கண்டக்டருக்கு டூட்டி போட முடியலை.. வேற சில சமயங்கள்ள நல்லா ஓடுற பஸ்ஸுக்கு போதிய கண்டக்டர், டிரைவர் இல்லாம அதுவும் நிக்குது.
ஒரு பஸ் விட்டவன் சில வருசத்திலேயே நாலஞ்சு பஸ் வாங்கறான். ஆனா, அ.போக. கழகம் இன்னும் நட்டத்திலதான் போகுது…
அது மட்டுமில்ல.. ஊழியர்கள் பெரும்பாலானவர்களும் சரியில்லை. தங்களோட உரிமைகளுக்கு குரல் கொடுக்கிற இவங்க கடமையை சரியா செய்யறதில்லை.. அலட்சியம்… நெல்லையில பயணிகளை கண்டக்டர் ஆபாசமா திட்ட… போக்குவரத்துக் கழகத்துக்கு ஒன்றரை லட்சம் அபராதம் விதிச்சிரு்குக நுகர்வோர் கோர்ட்… ” என்றும் சொன்னார்.
“தொழிலாளர் நலன் பாதிக்குமே” என்றேன்.
“தொழிலாளர்களுக்கான சம்பள்ததையும், டிக்கெட் கட்டணத்தையும் அரசு தீவிரமா கண்காணிக்கணும். அதோட பள்ளிக்கூட மாணவர்களு்ககு இலவச பாஸூக்கு பதிலா அரசே தனியார்களுக்கு பணம் செலுத்தலாம். டோல்கேட்ல கட்டுறோமே. ” என்றார்.
“வசூல் ஆகாத ரூட்கள்ல தனியார் ஓட்ட மாட்டாங்களே” என்றேன்.
“அந்த ரூட்கள்ல மட்டும் அரசு நடத்தலாம். ஏன்னா லாபம் வர்ற ரூட்ல கூட அரசு பேஸ் நட்டத்துலதான் ஓடுது” என்றவர், “இப்படி நான் சொல்றதால என்னை பாட்டாளிகளின் எதிரின்னு சொல்லுவாங்க. கட்டுப்பாடான அரசுகள் இருந்தாத்தான் பொதுத்துறை உருப்படும். நான் சொல்றமாதிரி செஞ்சா அரசு பணம் நிறைய மிச்சமாகும்” என்றார்.