டில்லி

மாநில அரசுகள் பட்டினிச் சாவு குறித்து அறிவிக்காததால் அது குறித்த விவரம் தெரிவதில்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் 25 முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.க்  தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நடைபெற்று வருகிறது.  சுமார் 40 நாட்களுக்கும் மேலாகப் பலர் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏறபட்டுள்ளதால் ஏழை மக்கள் உணவுக்கு வழியின்றி வாடி வருகின்றனர்.  இது குறித்து ஒரு செய்தி ஊடகத்தில் முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.

அந்த கட்டுரையில் ப சிதம்பரம், “கொரோனா பதிப்பு மற்றும் சமூக, பொருளாதார விளைவுகளுக்கு இடையிலான போரை மத்திய மாநில அரசுகள் நடத்தி வ்ருகின்ற்ன.   நம்மைப் போன்ற மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறோம்.   ஒரு பார்வையாளராக நம்மால் பலவற்றைக் கற்பனை செய்ய மட்டுமே முடிகிறது.

முதலில் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை வென்றதாகக் கற்பனை செய்வோம்.  அதாவது ஊரடங்கு கொரோனாவை குணப்படுத்தும் என கற்பனை செய்வோம்.  இந்த குணமாதல் முழுவதுமாக நடக்கும் வரை ஊரடங்கு கொரோனா பரவுவதைத் தடுத்து நிறுத்தும் என நம் கற்பனை வளரும்.  ஆனால் உண்மையில் ஊரடங்கு குணமாக்கும் நடவடிக்கையோ அல்லது கொரோனா பரவுதலை நிறுத்தும் நடவடிக்கையோ அல்ல.   ஊரடங்கு என்பது பரவுதலைச் சற்றே ஒத்தி வைத்து பரவுதல் வேகத்தைக் குறைக்கும்.   இதன் மூலம் நாம் நமது மதிப்பான நேரத்தைச் செலவழித்து மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை அதிகரிக்கவும், விழிப்புணர்வை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் முடியு,ம்.  இதைச் செய்ய கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வரை அரசுகளுக்கு 40 நாட்கள் நேரம் இருந்தும் அதைச் செய்தனவா?

இரண்டாவதாக தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாத வெளி மாநில தொழிலாளர்கள் அவர்களுடைய முகாம்கள், தனிமை இடங்கள் அல்லது தங்குமிடத்தில் தற்போதுள்ள நிலையில் சரியான உணவுடன் திருப்தியாக உள்ளதாகக் கற்பனை செய்வோம்.   ஆனால் உண்மையில் டில்லி காவல்துறை நடத்திய சோதனையில்  ”இந்த முகாம்களில், மின்விசிறி இயங்குவதில்லை,  மின்சார தடைக்கு ஏற்ப வசதிகள் இல்லை,  கழிப்பறை சுத்தம் செய்வதில்லை.  வெளி மாநில தொழிலாளர்கள் திருப்தி அற்று இருக்கின்றனர்.  அரசு ஊழியர்கள் இவர்களிடம் கடுமையாக நடக்கின்றனர். உணவு தரம் நன்கு இல்லை. கழிவறையில் துர்நாற்றம், கழிவறைகளில் காலை 7 முதல் 11 மணி வரை மட்டுமே நீர் வசதி, குளிக்க மட்டுமே சோப்பு, துணி துவைக்க ஏதும் இல்லை. கொசுக்கடி” எனப் பல குறைகள் தெரிய வந்துள்ளன.  சாதாரண முகாம்களிலேயே இவ்வளவு குறை இருந்தால் தனிமை முகாம்களில் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது.

மூன்றாவதாக ஒரு வெளி மாநில தொழிலாளி மும்பை அல்லது சூரத் நகரில் அவருடைய அறையில் பணி இன்றி அமர்ந்து, பணம் இல்லாமல் குடும்பத்துக்கு எந்த உதவியும் அளிக்க முடியாமல் இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கற்பனை செய்வோம்.  உண்மையில் இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு அரசின் எவ்வித உதவியும் கிடைப்பதில்லை, பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் கிடையாது.  அவர்கள் அதனால் வீடு திரும்ப மட்டுமே விரும்புகின்றனர்.  இவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் பேருந்துகள் அனுப்பின. ஆனால் இவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல பீகார் மறுத்து விட்டது. மத்திய அரசு சென்ற மாதம் 29 ஆம் தேதி வரை எவ்வித பொறுப்பும் ஏற்கவில்லை.  தற்போது பீகார் இடைநில்லா ரயில்களை அனுப்ப வேண்டுகோள்விடுத்துள்ளது.

நான்காவதாக இவர்களுக்குப் பணி இழப்பு இருக்காது எனவும் ஊரடங்கு முடிந்ததும் இவர்கள் அதே பணிக்கு மீண்டும் திரும்பலாம் எனக் கற்பனை செய்வோம்.  ஆனால் சி எம் ஐ இ அறிவ்ப்பின்ப்டி வேலை இன்மை 21.1% இருந்து 35.4% ஆக அதிக்ரித்துள்ள்து.  மேலும் பல பணிகள் உடனடியாக மீண்டும் தொடங்க முடியாது என்பதால் இவர்களில் பலருக்கு உடனடியாக பணிக்குத் திரும்ப முடியாது.   இவர்கள் பணி புரியும் பல நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வங்கிகள் உதவாது.  விநியோக சங்கிலி முறிந்துள்ளது.   இதனால் முழு உற்பத்தி உடனடியாக நடக்காது. இதனால் உற்பத்தியாளர் எவ்வித வர்த்தகமும் செய்ய முடியாது.  யாரும் ஆதாயம் வராத தொழிலில் உடனடியாக நிறைய முதலீடு செய்யமடாரக்ள் என்பதே உண்மையாகு.

ஐந்தாவதாக அரசு மார்ச் மாதம் 25 ஆம் தேதி அறிவித்தபடி நிதி நடவடிக்கை திட்டம் 2 ஐ அறிவித்து வர்த்தகத்தை முன்னேற்றும் எனக் கற்பனை செய்வோம்.  ஆனால் இந்த கட்டுரை எழுதும் வரை அரசு எவ்வித நடவடிக்கையும் அறிவிக்கவில்லை.  அரசுக்கு நிதி நடவடிக்கைக் குழு எவ்வித பரிந்துரையும் அளித்ததாகத் தெரியவில்லை.  உண்மையில் வங்கிகளில் நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அவற்றால் வர்த்தக நிறுவனங்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாத நிலையில் உள்ளன.

ஆறாவதாக பெரிய நிறுவனங்கள் எப்படியாவது சமாளித்து முன்பு போல் நன்கு இயங்கும் என கற்பனை செய்வோம்.  உண்மையில்  பெரிய நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வரும் நிலையில் இல்லை.  அவர்கள் தற்போது செலவைக் குறைத்து நிதியை சேமிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதனால் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து,  தொழிலாளர்களுக்குச் செலவிடும் தொகையைக் குறைத்து இழப்பை சரிக்கட்டினால் மட்டுமே கடனில் இருந்து மீளும் நிலையில் உள்ளனர்.   இது தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கவனித்தால் நன்கு புரியும்

ஏழாவதாக ஊரடங்குக்குப் பிறகு பொருளாதாரம் கிடுகிடு என உயர்ந்து நமது வாழ்க்கைத் தரம் உயரும் எனக் கற்பனை செய்வோம்.   ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்னும் தவற்றுக்குப் பிறகு இன்று வரை இந்தியப் பொருளாதாரம் மீண்டு வராமல் உள்ளது.   அதன் பிறகு ஜிஎஸ்ட் அமலாக்கத்தால் மேலும் அடி வாங்கிய இந்தியப் பொருளாதாரம் தற்போது ஊரடங்கால் மிகவும் சீர்கெட்டுள்ளது.   இந்தியப் பொருளாதாரம் மீண்டு வர மக்களின் கடின உழைப்பு, நல்ல திட்டங்கள், அதைத் திறமையாகச் செயல்படுத்தல், பணம், பகிரங்க சந்தை, அறிவுசார்ந்த உரவுகள், மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்பு ஆகியவை அனைத்தும் தேவையாகும்.,

தற்போது பட்டினியால் எத்தனைப் பேர் இறந்துள்ளனர் என்பதை நம்மால் தெரிந்துக் கொள்ளவும் முடியாது.  ஏனெனில் எந்த ஒரு மாநில அரசும் எத்தனை பேர் பட்டினியால் உயிர் இழந்தனர் என்னும் விவரங்களை வெளியிடுவதில்லை

லெவிஸ் கரோல் என்னும் அறிஞர், “உண்மையுடன் நடக்கும் போரில் கற்பனை என்னும் ஒரே ஆயுதம் மட்டுமே உள்ளது” எனக் கூறி உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.