டெல்லி: மத்திய அரசு ஊழியராக இருந்தாலும்., அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணையில்லா குற்றங்கள் என்பதால், மாநில காவல்துறையும் அவற்றை விசாரிக்க முடியும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் மத்தியஅரசு ஊழியர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில், அவர்மீது மாநில காவல்துறைஇ ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (PC Act) 17-வது பிரிவின்படி, அந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை ஒரு மாநில ஏஜென்சி, மத்திய ஏஜென்சி அல்லது எந்தவொரு காவல்துறை ஏஜென்சியும் விசாரிக்க முடியும்; ஆனால், விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஒரு குறிப்பிட்ட தரவரிசையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான லஞ்சம், ஊழல் மற்றும் தவறான நடத்தை தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை” என்று தெரிவித்தனர்.
நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே, மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர் களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு சிபிஐ-இடமும், மாநில அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணையில்லா குற்றங்கள் என்பதால், மாநில காவல்துறையும் அவற்றை விசாரிக்க முடியும் என்று நீதி மன்றம் மேலும் கூறியது.
மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தபோது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய அரசு ஊழியராக இருந்தபோதிலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
‘சிபிஐ மட்டுமே இந்த வழக்கை அல்லது விசாரணையைத் தொடங்கியிருக்க முடியும் என்று கூறுவது தவறானது’ என உயர் நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு சரியானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
[youtube-feed feed=1]