சென்னை: பல்கலைகழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என சட்டப்பேரவையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் துணை ஆளுநரே வேந்தர்களாக உள்ளனர். அவர்கள்தான் பல்கலைக்கழக வேந்தர்களாக இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தலைவர்களை நியமித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், மாநில ஆளுநருக்கும், அந்த மாநில ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆளுநரின் பதவியை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி, மாநில அரசு பரிந்துரைக்கும் பட்டியலில் ஒருவரைத்தான் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டு வேண்டும, ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை குறைத்து சட்டத்திருத்தம் இயற்றியிருக்கின்றன.
இதையடுத்து, தமிழ்நாட்டிலும், அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என்பதை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று சட்டப்பேரவையில் தெரிவித்து உள்ளார். பல்கலைகழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.