டில்லி

மாநில மின் வாரியங்கள் வாடிக்கையாளருக்கு மின்சாரம் வழங்காமல் அதை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் நிலக்கரி பஞ்சம் கடுமையாக உள்ளதால் பல மாநிலங்களில் அனல் மின் நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.   இதனால் பல்வேறு மாநிலங்களில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 ,அஒ நேரம் மின்வெட்டு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  தவிர டில்லியின் மின்சார பயன்பாட்டைப் பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்பதால் மின் வெட்டு இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சில மின் வாரியங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20 வரை விலை வைத்து விற்பனை செய்வதாகத் தகவல்கள் வெளியாகி  உள்ளது.  இதையொட்டி முதலில் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் இத்தகைய நடவடிக்கைகளில் மாநில மின் வாரியங்கள் ஈடுபட கூடாது எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.