சென்னை,
மிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர்க ளின் சொத்து விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவுற்று, தேர்தல் பிரசாரமும் தொடங்கிவிட்டது.
வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய கட்சிகளின்  வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
all-signs
தஞ்சாவூர் தொகுதி:
அதிமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமிக்கு அசையும், மற்றும் அசையா சொத்துக்‌கள் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் என அவரது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்குது
திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு 31 லட்சத்து 31 ஆயிரத்து 202 ரூபாய் இருப்பதாக சொல்லியிரிக்கார்
தேமுதிக வேட்பாளர் அப்துல்லா சேட்டின் சொத்து மதிப்பு 3 கோடி ரூபாய்.
பாரதிய ஜனதா வேட்பாளர் ராமலிங்கத்திற்கு 1.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என கூறப்பட்டுள்ளதுடன்
இந்த 4 வேட்பாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் இல்லை எனவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிச்சிருக்காய்ங்க.
அரவக்குறிச்சி தொகுதி:
அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு 2 கோடியே 8 லட்சத்து 28 ஆயிரத்து 654 ரூபாய் மதிப்பிலான சொத்து இருக்காம். அவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
திமுக வேட்பாளர் கே.சி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு 89 கோடியே 10 லட்சத்து 66 ஆயிரத்து 516 ரூபாய். அவர் மீது 2 வழக்குகள் நிலுவையில் இருக்குது.
தேமுதிக வேட்பாளர் அரவை முத்துவின் சொத்து மதிப்பு 93 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் என கூறப்பட்டுள்ளது. அவர் மீது குற்றவழக்குகள் இல்லை.
பாரதிய ஜனதா வேட்பாளர் பிரவீனிற்கு ஒரு கோடியே 28 லட்சத்து 96 ஆயிரத்து 491 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மீதும் குற்றவழக்குகள் இல்லை.
திருப்பரங்குன்றம்:
அதிமுக வேட்பாளர் ஏகே. போஸின் சொத்து மதிப்பு‌ 16 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். அவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை.
திமுக வேட்பாளர் சரவணனுக்கு 7 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 75 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை.
தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனிடம் 17 லட்சத்து 30 ஆயிரம் ‌உள்ளது. இவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
பாரதிய ஜனதா வேட்பாளர் சீனிவாசனுக்கு ஒரு கோடியே 2 லட்சத்து 5 ஆயிரத்து 324 ரூபாய் உள்ளது. அவர் மீதும் வழக்கு இல்லை.
assets-copy
இவ்வாறு வேட்பாளர்களின் சொத்து விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.