சென்னை:
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மத்தியஅரசு தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து, அதை அமல்படுத்த மறுத்து வரும் நிலையில், புதிதாக கல்விக்கொள்கையை உருவாக்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட (21-22) இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமை யில் 13 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.