ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை: மு.க. ஸ்டாலின் கண்டனம்

Must read

சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அமலாக்க இயக்குனரகத்தைப் பயன்படுத்தி ஆளும் பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் மூர்க்கத்தனமான செயலில் ஈடுபடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், அமலாக்க இயக்குனரகத்தைப் பயன்படுத்தி அல்ல” என முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

More articles

Latest article