டில்லி

பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான சல்லா சீனிவாசுலு செட்டிக்கு வங்கியின் ரூ1.5 லட்சம் கோடியை வசூல் செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று இயக்குநர்களில் ஒருவர் ஆன சல்லா சீனிவாசுலு செட்டி தென் இந்தியாவில் ஆந்திராவில் உள்ள பொட்லபாடு என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் ஆவார்  இவருடைய தந்தை இங்கு ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தார்  இந்த கடையில் கடன் வாங்கிய கிராம மக்களிடம் கடனை வசூலிக்கும் பொறுப்பு இவருக்கு 12 வயதில் அளிக்கப்பட்டது.   அறுவடைக் காலங்களில் வீடு வீடாகச் சென்று இவரும் இவர் சகோதரரும் கடன் வசூல் செய்து வந்தனர்.

அப்போது சிறிய அளவில் செய்த கடன் வசூல் செய்த செட்டி  சுமார் 42 வருடம் கழித்து தற்போது கோடிக்கணக்கில் செய்ய உள்ளார்  இந்தியாவில் அதிக அளவில் கடன் அளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று இயக்குநர்களில் செட்டியும் ஒருவர் ஆவார்.  இவருக்கு தற்போது வங்கியின் ரூ.1.5 லட்சம் கோடி கடனை வசூல் செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செட்டி, “நான் எனது தந்தையிடம் இருந்து கடன் வசூல் செய்வதில் இரு முக்கிய பாடங்களை கற்றுள்ளேன்.  அதில் ஒன்று நேரம்.  நாம் எவ்வளவு சீக்கிரம் கடனை வசூல் செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இரண்டாவது வசூலை பின் தொடர்வது.   ஒருவரிடம் கடன் தொகையைப் பெற முடியவில்லை என்றால் அத்துடன் விடாமல் மேலும் மேலும் பின் தொடர்ந்து வசூல் செய்வதாகும்.

இவ்வாறு வசூல் செய்வதில் நிறுவனக் கடன்களை விடச் சிறிய கடன்களுக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதில்லை  இவர்கள் வெகு விரைவில் கடன்களை செலுத்தி விடுகின்றனர்.  இவர்களிடம் கடன் வசூலிக்க வெளியாட்களை நியமிப்பதை விட வங்கி ஊழியர்களைப் பேசச் சொல்லிப் புரிய வைப்பது எளிதாக உள்ளது.  இந்தக் கடனை சரியாகத் திருப்பி தருவோருக்கு மேலும் கடன்கள் எளிதாகக் கிடைக்கும் என்பதை வங்கி ஊழியர்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனக் கடன்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன.  மொத்தம் உள்ள வாராக் கடன்களில் பாதிக்கும் மேல் நிறுவனக் கடன்கள் உள்ளன.  தற்போது செப்டம்பர் வரை திவால் வழக்குகள் போடக் கூடாது என்னும் அரசு உத்தரவினால் இத்தகைய கடன் வசூல்கள் மேலும் இழுத்தடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.   எந்த முறையில் நிறுவனக் கடன்களை வசூலிப்பது என்பது இன்னும் கடினமாகவே உள்ளது.    அந்தந்த நிறுவன நிலையைப் பொறுத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என எனக்குத் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.