வாஷிங்டன்:

கலிபோர்னியாவில் ஸ்டார்பக்ஸ் காபி மீது புற்றுநோய் எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பல லட்சம் டாலர் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலையை ஸ்டார் பக் நிறுவனம் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஸ்டார்பக்ஸ் உள்பட 90 காபி விற்பனையாளர்களுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காபி கொட்டைகளை வறுக்க ஆக்ரிலமைட் என்ற ரச £யணம் பயன்படுத்தபடுகிறது. கலிபோர்னியா விதிகளின் படி ஒரு நிறுவனம் அதன் தயாரிப்பு பொருட்களில் ரசாயணம் இருந்தால் அந்த பொருளின் மீது புற்றுநோய் எச்சரிக்கை வெளியிடபட வேண்டும்.

இந்த வகையில் காபி கொட்டைகளை வறுக்க ரசாயணம் பயன்படுத்தும் ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட காபி விற்பனை நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு மூலம் புற்றுநோய் ஏற்படாது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க தவறிவிட்டனர்.

இதையடுத்து ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட காபி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் புற்றுநோய் எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வரும் 10ம் தேதி வரை காபி நிறுவனங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு 2010ம் ஆண்டு, நச்சு ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு சார்பில் தொடரப்பட்டது. 2002ம் ஆண்டு முதல் இந்நிறுவனங்களில் காபியை குடித்தவர்களுக்கு தலா 2,500 டாலர் வீதம் அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு எவ்வளவு அபராதம் என்பது 3ம் கட்ட விசாரணையில் தான் தெரியவரும். தற்போது முதல் விசாரணையில் ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தோல்வியை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.