கொரோனா தடையால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின்றன. சமீபத்தில் அமிதாப்பச்சன் நடித்த ’குலாபோ சிட்டாபோ’ இந்தி படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
அப்போது அமிதாப்பச்சன் வசனம் ஒன்றை விடாமல் 5 முறை பேசிக் காட்டும்படி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, அனுஷ்கா சர்மா, நேஹா துப்யா உள்ளிட்ட பலருக்கு சவால் விட்டார். தற்போது அந்த சவாலை நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு நேஹா துப்யா விட்டிருக்கிறார்.
அதை ஏற்றுக்கொண்ட ஸ்ருதி ஹாசன் தன்னுடைய நெருங்கிய தோழி நடிகை தமன்னாவுக்கு இந்த வசனத்தை உன்னால் சொல்ல முடியுமா என்று கேட்டு சவால் விட்டிக்ருகிறார். மேலும் தனது தங்கை அக்ஷரா ஹாசன், ’பாகுபலி’ நடிகர் ராணா ஆகியோருக்கும் அதே சவால் விடுத்திருக் கிறார் ஸ்ருதி ஹாசன்.