சென்னை: முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் முத்திரை தாள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. இதனையடுத்து பதிவுத்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலை அடிப்படையிலேயே அதனை விற்க வேண்டும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், அதிக வருமானத்தை ஈட்டும் துறைகளில் பத்திரபதிவு துறையும் உண்டு. இதனால், பத்திரப்பதிவு துறையில் பயன்படுத்தப்படும் முத்திரைத்தாள் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.  இதனால்,  முத்திரைத்தாள்கள் அரசு அலுவலகங்கள் வாயிலாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல  ஒப்பந்தம் மூலமும் பலருட்ககு  முத்திரைத்தாள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், முத்திரை தாள்களுக்கு  அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து பதிவுத்துறை, முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

மேலும் முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலையின் படியே மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விலைக்கு, முத்திரைத்தாள் மற்றும் நீதிமன்ற வில்லை விற்பனை செய்து, புகார் பெறப்பட்டு, அதன் மீதான விசாரணையில், அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தால், முத்திரைத்தாள் விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும்.பதிவு துறை விதிமுறை அடிப்படையில், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் செயல்படுகின்றார்களா? என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

மேலும், முத்திரைதாள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் வந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.