சென்னை: பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பமாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், திமுக சார்பில், ஏற்கனவே பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தோ்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று திமுக மாவட்டச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களிடம் உரையாற்றினார்.
அப்போது, மத்திய பா.ஜ.க.அரசின் அநீதிகள், திமுக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதுடன், தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்களை திமுகவிலும் அரசிலும் எதிர்பார்க்கலாம். மக்களவை தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 26ஆம் தேதி முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாகச் சென்று திமுகவினர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திட்டத்தின் மூலம் பாஜகவின் அநீதி, திமுக அரசின் சாதனைகளை மக்களிடையே சென்று சேர்க்க முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.