சென்னை: பெண் ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் காவலர் பணி நியமனம் தொடர்பான ஊழலை தடுத்ததால், அவரது அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், ஸ்டாலினின் இரும்புக்கரம் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தம்மை கொலை செய்ய சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அவர் ழுதியுள்ள அவர், காவல்துறையில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முறைகேடுகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாம் வெளிக்கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த சில நாட்களில் தனது அலுவலகம் தீக்கிரையானது என புகார் தெரிவித்துள்ள கல்பனா நாயக், அப்போது நான் அலுவலகத்தில் இருந்திருந்தால் எனது உயிரும் பறிபோயிருக்கும் என தெரிவித்துள்ளார். போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தன்னை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர், விபத்து நடந்த ஒரு நாளிலேயே போலீஸ் ஆட்சேர்ப்பு பட்டியல் தனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என தெரிவித்துள்ளார். மூத்த அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவினால், மற்ற போலீசாரின் நிலைமையை சிந்திக்க வேண்டும் என்றும் கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. டிஜிபியின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பல மாதங்களாக மறைக்கப்பட்ட நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்காதால், தனது கடிதம் குறித்து அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது வைரலாகி வருகிறது. காவல்துறையின் உயர் அதிகாரிக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் விதிகள் மற்றும் சட்டங்களை மதிக்காமல் நடப்பது வழக்கமாகி விட்டது. இந்த அரசின் செயல்பாட்டின் உண்மையை உயர் போலீஸ் அதிகாரியால் கூட பேச முடியவில்லை. துணை ஆய்வாளர் நியமனத்தில் தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சுட்டிக்காட்டினார். அதற்குப்பரிசாக அவரது அலுவலகம் எரிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் இருந்திருந்தால் அவர் உயிரை இழந்திருக்கலாம். மிக மோசமான விஷயம் என்னவென்றால், இந்த விஷயத்தில் உண்மை யான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை போலீசார் புறக்கணித்தது ஏன்?
உயர் போலீஸ் அதிகாரிகள் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க விரும்பினாலும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது. தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர்; போலீஸ் உயர் அதிகாரிகள் கூட மாநிலத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.
முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்க பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பெண் ஏ.டி.ஜி.பி. அறை எரிக்கப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்