ரவுண்ட்ஸ்பாய்
aa
டந்த ஆறாம்தேதி, “முதல்வர் ஜெயலலிதா தன்னை யாரும் வந்து சந்திப்பதை விரும்புவதில்லை. சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை. எனவே அவரை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று தெரிவித்தார் தி.மு.க. பொருளாளும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்.
ஆனால் அடுத்த இரண்டாவது நாளே- எட்டாம் தேதி – ஜெயலலிதா உடல் நலன் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனை சென்றார்.
ஆறாம் தேதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் என்ன சொன்னார்?
”ஜெயலலிதாவை யாரையும் சந்திப்பதில்லை. சந்திக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக செய்தி. அதனால், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.
a
ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி மிகத் தெளிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆட்சிப் பொறுப்பில் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய அமைச்சர்களோ, தலைமைச் செயலாளரோ உண்மை நி்லவரத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை பரவும் வதந்திகளைக் குறைக்கும் வகையில் எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
முதல்வரின் உடல் நலன்  குறித்து விளக்கம் சொன்னால், நாட்டில் பரவக் கூடிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று தி.மு.க. தலைவர் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், இதுவரையில் அந்த நிலையை அவர்கள் எடுக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது” என்று ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.
இப்படி பேசியதற்கு இரண்டாம் நாள் அப்பல்லோ வந்து சென்றார். இடையில் ஏழாம்தேதி அப்படி என்ன நடந்தது? ஸ்டாலினை மனம் மாற வைத்த அந்த போதி மரம் எங்கிருக்கிறது?
இதுகுறித்து செய்தியாளர்கள் யாரும் மு.க.ஸ்டாலினிடம் ஏன் கேட்கவில்லை?