தூத்துக்குடி:

நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில், தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்வையிட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின்,

Asuran – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர்,  அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன்  மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தனது வாழ்த்துகளையும் – பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்குனேரி தொகுதியில்  திமுக தலைவர் ஸ்டாலின் 2வது கட்ட பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலை யில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கத்திற்கு சென்று தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தை மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். அவருடன் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் படத்தை பார்த்து  ரசித்தனர்.