சென்னை:
ராகுல் காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றங்களை நாடிய ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து வழக்கை விசாரித்த பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார் என்றும் மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]