சென்னை:
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லி பயணமாக உள்ளார்.

சென்னையில் இருந்து இன்று இரவு புதுடெல்லி செல்லும் முதல்வர், நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியை, தமிழகத்தில் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு அளித்ததற்கும், துவக்க விழாவுக்கு வந்ததற்கும் நன்றி தெரிவிக்க உள்ளார். அத்துடன் தமிழகத்தின் தேவைகளை பட்டியலிட்டு, கோரிக்கை அளிக்க உள்ளார் என, தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel