சென்னை,

டல்நலக் குறைபாடு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியனை மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேற்ற  திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் காரணமாக உடடினயாக அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் 2 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

வை.கோ.

இந்நிலையில், நேற்று மாலை மருத்துவமனைக்கு சென்ற வை.கோ. தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது,  இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் இரா.முத்தரசன் மற்றும் மதிமுக தென் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் சைதை ப.சுப்ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஸ்டாலின்:

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று தா.பாண்டியனிடம் உடல்நலம் விசாரித்தார்.  மாவட்ட கழக செயலாளர் சைதை ப.சுப்ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.