சென்னை:
ஆ.ராசாவின் மனைவியின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து தெரிந்து கொண்டார்.

ஆ.ராசாவின் மனைவி உடல் நலக்குறைவால் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆ.ராசாவின் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அவரை நேரில் சந்தித்தார். பின்னர் எனது மனைவியின் உடல் நலம் குறித்தும், வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் ஆலோசித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கழக இளைஞர்அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் சபரீசன் ஆகியோர் உடனிருந்தனர்.