நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக-வின் பிரச்சார பாடலாக இடம்பெற்ற ‘ஸ்டாலின் தான் வாராரு’ பாடலை இசையமைத்த ஜெரார்டு ஃபெலிக்ஸின் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஜெரார்டு ஃபெலிக்ஸ் – பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துக் கொண்டனர்.

அவர்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி, தமிழ் போல் வாழ்கவென வாழ்த்தியதாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.