பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதான வழக்கு முடித்து வைப்பு!

சென்னை:

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக  நக்கீரன் கோபால், ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது தொடரப்பட்ட  வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதால் முடித்து வைக்கப்படுவதாக நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

பொள்ளாச்சி  பாலியல் விவகாரம் தொடர்பாக, பொள்ளாச்சி ஜெயராமன் மீது குற்றம் சாட்டியதாக அவர் கொடுத்த புகாரின்பேரில், நக்கீரன் கோபால், ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்பட பலர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பொள்ளாசி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதால், நக்கீரன் கோபால், சபரீசன் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்..

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைப்பதாக அறிவித்தது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nakkeeran Gopal, Pollachi abuse, Pollchi sexual harassment, sabarisan, stalin, stalin son-in-law
-=-