விழுப்புரம்: திண்டிவனம் அருகே பொலகுப்பதில் ரூ.500கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனால்,  6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பில் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அதிக தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திண்டிவனம் அருகே  சிப்காட் தொழிற்பூங்காவில் லோட்டஸ் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்பட்டது. பொலகுப்பதில் 6ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் காலணி பூங்கா அமைய உள்ளது. திண்டிவனம் பெலாகுப்பத்தில் 167.41 ஏக்கரில் ரூ. 500 கோடி மதிப்பில் லோட்டஸ் காலணி தொழிற்சாலை அமைய உள்ளது. அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர வேண்டும் என்பதே திமுக அரசின் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமூக அமைதியும், தொழில் வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்கு வோருக்கு திமுக அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது என கூறினார். தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

10 மாத கால ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் நிறுவனங்கள் வருகின்றன. தோல் அல்லாத காலணிகள் தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும் என பேசினார். திமுக ஆட்சி பொறுப்பேற்று பிறகு ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி பெறும் வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என பேசினார்.

தமிழ்நாட்டில் வெளிப்படையான அரசு நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான் என கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு எட்டும் என கூறினார்.