கரூர்:
ரூர், நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, முடிந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.

இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் மற்றும் நாமக்கல் செல்கிறார்.