சென்னை,

மிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை வள்ளுவர் கோர்ட்டத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பமானது.

சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு இன்று காலை 8 மணிக்கு வந்த மு.க.ஸ்டாலின் உண்ணா விரத பந்தலில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.  அவருடன் திமுக எம்.பி. கனிமொழி, துரைமுருகன்  மற்றும் முக்கிய நிர்வாகிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]