சென்னை:
மிழகத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை நடை பெறுவதற்கு ஏதுவாக ரூ 129 .59 கோடி  வைப்பு நிதிக்கான காசோலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
போதிய வருமானம் இல்லாத திருக்கோவில்களில் ஒருகால பூஜை அது நடை பெறுவதற்கு ஏதுவாக பெரிய திருக்கோயில்களில் உபரி நிதியிலிருந்து, நிதி உதவி செய்யும் விதமாக ஆலயம் மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு போதிய வருமானம் இல்லாத 12 ஆயிரத்து 959 திருக்கோயில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில்  ஒவ்வொரு கோவிலுக்கும் வைப்பு நிதி, ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறார். அதற்கென மொத்தம் 129 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் தமிழக மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக வழங்கினார்.  இதன்மூலம் கோவில்களுக்குக் கூடுதலாக வட்டி தொகை கிடைக்கப் பெறுவதால் பூஜை பொருட்களைத் தேவையான அளவு வாங்கி பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.