ஷார்ஜா:

ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக்கக் கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்றுள்ளார்.

ஷர்ஜாவில் வரவேற்பு

நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின் மற்றும் துர்காவை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.

ஷார்ஜாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின், அங்குள்ள புத்தக ஆணைக்குழுவுக்கு 1,000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் – துர்கா

பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், “ எந்த மொழி பேசுபவராக.. எந்த இனத்தவராக இருந்தாலும்  தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்தை ஏற்காமல்  உயர்ந்து நிற்க முயற்சி செய்பவர்கள் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்களே.

அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் ஷார்ஜா சுல்தான் போற்றுதலுக்குரியவர்” என்று பேசினார்.

மேலும், “கடந்த தி.மு.க ஆட்சியின்போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக ‘வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம்’ ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிச்சயம் கழக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும்” என்று ஸ்டாலின் பேசினார்.

பிறகு மனைவி துர்காவுடன் சிறிதி நேரம் பொழுதுபோக்கா, பழைய காலத்து பாரம்பரிய காரில் அமர்ந்து போஸ் கொடுத்தார்.

நாளை இருவரும் சென்னை திரும்புகிறார்கள்.