சிகாகோ: முதலீடுகளை ஈர்க்க  17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,  சிகாகோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை பெறுவதற்காக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.  ஏற்கனவே சான்பிரான்சிஸ்கோ சென்றவர் அங்கு கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டதுடன்,  பல நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் மேற்கொண்டார்.

இதையடுத்து,  சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் அங்குள்ள தமிழர்களும் முதலமைச்சரை வரவேற்றனர்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின்  அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,  , “புதிய கனவுகளுக்கான களம் அமைக்கும் மாலையின் பேரமைதி” என பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார்.