சென்னை:
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற பெயரில் உயர்நீதிமன்ற உத்தரவினை அப்பட்டமாக மீறி, ஆபத்தான மற்றும் இடையூறு ஏற்படுத்தக்கூடிய பதாகைகளை அ.தி.மு.க. அரசு வைத்து வருவதால், தற்போது கோவையை சேர்ந்த ரகுபதி என்ற இளம் பொறியாளர் மரணமடைந்திருக்கிறார்.
சட்டத்தை மீறி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel