சென்னை:
சட்டமன்றத்தில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் 9 எம்எல்ஏ.க்களுடன் கவர்னரை சந்திக்க ராஜ்பவன் சென்றார். கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டபோது முதலில் மறுக்கப்பட்டது.
இதையடுத்து ராஜ்பவனில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவரது சந்திப்புக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட ஸ்டாலின் கவர்னரை சந்தித்தார். சட்டமன்றத்தில் நடந்தவற்றை அவர் எடுத்துக் கூறினார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுது, திமுக எம்எல்ஏ.க்கள் சிலரது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்த பிறகும் எங்களை வலுகட்டாயமாக வெளியேற்றினர் என்று ஸ்டாலின் தெரிவித்தார். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.