சென்னை:
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் செய்த மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி கலவம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தலைமைச் செயலகத்துக்குச் சென்ற ஸ்டாலின் உள்பட திமுகவினர் சென்றனர். முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி கோரினர்.
ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் 20 பேர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமியும் மற்றும் காங்கிரசாரும் இணைந்து மறியல் செய்தனர்.
இவர்களை அகற்ற காவல்துறையிர் முயற்சி மேற்கொண்டபோது, திமுக எம்எல்ஏக்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்டாலினை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியே விட்டனர்
இதையடுத்து சாலையிலும் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.