சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் உள்பட 18 பேர் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழுவின் இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடரின்போது, தமிழகத்தில், , தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை சபாநாயகரின் அனுமதியின்றி எடுத்துச்சென்றதாக உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கனவே அனுப்பிய நோட்டீஸ் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில், உரிமைக்குழுவின் நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், உரிமை மீறல் குழுவின் நோட்டீசை ரத்து செய்வதாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டுள்ளார்.