ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளதத்தில் இருந்து இன்று காலை புவி கண்காணிப்பு செயற்கை கோள் இ.ஓ.எஸ்.,- 08 உடன் எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவியை கண்காணிக்க, இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.17 மணி அளவில் விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட் கடந்த சில தினங்களுக்கு முன் விண்ணில் பாயவிருந்த நிலையில் சிறு கோளாறு காரணமாக, அதை விண்ணில் ஏவுவது திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், ராக்கெட் இன்று (ஆக16) காலை 9: 17 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, அற்கான 6மணி நேர கவுண்டவுன் அதிகாலை 2,30 மணி அளவில் தொடங்கிய நிலையில், இன்று காலை 9.17 மணி அளவில் புவியை கண்காணிப்பு செயற்கை கோளுட்ன எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
இ.ஓ.எஸ் செயற்கைக் கோள் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்கோளை எனப்படும் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடையும், ஒரு ஆண்டு ஆயுட்காலத்துடனும் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளானது தரையில் இருந்து சுமாா் 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளது. இதில், எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (இஒஐஆா்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (ஜிஎன்எஸ்எஸ்-ஆா்), சிக் யுவி டோசிமீட்டா் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆா் கருவி பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்கவும், ஜிஎன்எஸ்எஸ்-ஆா் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீா்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்பட இருக்கின்றன.