சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் 10வது வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 64ஆயிரத்து 491 மாணவ மாணவிகள் , தனித்தேர்வர்களாக 36,649 பேர் இன்று தேர்வை எழுதுகிறார்கள்.
தேர்வு எழுதுவதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும், தேர்வின் நிகழும் முறைகேடுகளை தடுக்க 6,900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதல்நாளான இன்ற தமிழ் முதல் தாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.
முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களை பார்க்கவும் வழங்கப்பட்டது.
காலை 10.15 மணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தொடங்கினார்கள். பகல் 12.45 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் 10வது வகுப்பு பொதுத்தேர்வை 186 சிறைக்கைதிகளும் எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.