பாகுபலி படத்தின் இரு பாகங்களை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, டைரக்ட் செய்யும் புதிய படம் ’’RISE ROAR REVOLT’’ ( RRR).
சுதந்திர போராட்ட தியாகிகளான கோமரம் பீம், சீதாராம ராஜு ஆகியோரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது.
ஜுனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகிய இருவரும் கதாநாயகன்களாக நடிக்கும் இந்த படத்துக்கு ஐதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பழைய டெல்லியை சித்தரிக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடந்து வந்தது.
ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 7 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது.
ராம் சரண் ஜோடியாக நடிக்கும் பிரபல இந்தி நடிகை அலியா பட், இந்த படத்துக்காக ஆசிரியர் ஒருவரை அமர்த்தி தெலுங்கு கற்று வருகிறார்.
அஜய்தேவ்கான் கவரவ வேடத்தில் நடிக்கும் இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்பை முடித்து கோடைவிடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார், எஸ்.எஸ்.ராஜமவுலி.
-பா.பாரதி.