சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும், மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் எனப்படும் மருந்து தயாரிப்பு ஆலையில், தயாரிக்கப்பட்ட கோல்டுரிப் இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்தியஅரசு, ஸ்ரீசன் தயாரிப்பு மருந்துகள் விற்பனைக்க தடை விதித்தது. மேலும், உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை பணித்தது.

இதைத்தொர்ந்து,  22 குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படும் ‘கோல்ட்ரிப்’ (Coldrip) இருமல் மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் (Srisan Pharmaceuticals) நிறுவனத்தின் உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அந்த ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளது  தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தின் மீதும் விரிவான ஆய்வை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.