சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவத்தால் பலரும் வேதனை தெரிவித்தனர்.இது தொடர்பாக நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில்:-

“கரோனா மனித இனத்தையே மரண பயத்தில் ஒதுக்கி வைத்திருக்கும் தொற்று. இதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் மனிதன் மாறுவான், மனிதத்தன்மை மேலோங்கும் என்று நினைப்போமேயானால் அது தவறோ என்று எண்ணும்படி எத்தனை சம்பவங்கள்?

 

கள்ளச்சாராயம், ஊழல், மதத்தின் அடிப்படையில் மக்களை மதிப்பது. அத்தனையும் அமோகமாக நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள். இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் இந்தக் காணொலி, என் மனதை உலுக்கிவிட்டது. கை தட்டினால் மட்டும் போதுமா? நமக்காகச் சேவை செய்து மாண்ட ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது?” என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]