சிறிசேனாவுக்கு 6 மாதத்தில் சாவு: சொல்கிறார் முன்னாள் குற்றவாளி, இந்நாள் ஜோதிடர்!!

Must read

கொழும்பு:
லங்கை ஜனாதிபதி சிறிசேனா இன்னும் 6 மாதத்தில் மரணத்தை தழுவுவார் என்று முன்னாள் கடற்படை வீரரும், குற்றவாளியுமான விஜித் ரோஹன விஜயமுனி கூறி உள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1vijitha-rohana-wijemuni 1-rajiv
இலங்கையின் பிரபல ஜோதிடர் என்று வலம் வருபவர், முன்னாள் குற்றவாளியான  விஜித் ரோஹன விஜயமுனி. இவர் ஜோதிடம், ஆருடம் பார்ப்பதில் வல்லவராம். இவர் ஒரு சிங்கள வெறியன் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் இலங்கை ஜனாதிபதி பற்றி தனது ஆருடத்தை வெளியிட்டதாக இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனா இன்னும் 6 மாதத்திற்குள் மரணத்தை தழுவுவார் என்றும், மீண்டும் இலங்கையின் ஜனாதிபதி ஆக கோத்தபய ராஜபக்சேவே வருவார் என்று பரபரபப்பு ஆருடம் என்று கொளுத்தி போட்டுள்ளார். தற்போது இந்த செய்தி கொழும்புவில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
1rajapakse-prays
இந்த ஆருடத்தை அடுத்து ஜோதிடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவுக்கு விசாரணை சம்பந்தமாக  அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இதுகுறித்து கூறிய ஜோதிடர், ‘தான் கூறியது கணிப்பு மட்டுமே’  எனவே தான் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும் சவடால் விட்டுள்ளார்.
இந்த பரபரப்பு ஜோதிடர்… பரம்பரை ஜோதிடர் அல்ல. ஏற்கனவே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர் என்பதும், இலங்கை சென்றபோது தமிழக அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியை அணிவகுப்பின்போது துப்பாக்கி கட்டையால் தாக்கி அதன் காரணமாக பல வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது சிறிசேனா அரசு தமிழ் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது பொறுக்க முடியாமல், சிங்கள வெறியனான இந்த பரபரப்பு ஜோதிடர் இதுபோன்ற ஒரு தகவலை சொல்லி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அவரது ஆருடம் தவறு என்று மற்றொரு பிரபல ஜோதிடர் கருத்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article