ஒபாமாவைவிட புடினே தேவலாம்: சேம் சைடு கோல் போடும் டொனால்ட் ட்ரம்ப்

Must read

ர்ச்சைப் பேச்சுக்கு பேர்போனவர் அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். இவர்  சமீபகாலமாக அமெரிக்காவின் பரம வைரியான ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினை வானளாவ புகழ்ந்து வருவது அனைவர் புருவங்களையும் ஆச்சரியத்தில் உயர்த்தியுள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டபோது அவருக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு டிரம்ப் நன்றி கூறினார். இந்த நிலையில் லித்துவேனிய தலைநகர் வினியஸில் ஒரு ஓட்டல் சுவரில் புதினும் டரம்ப்பும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக்கொள்வது போல  ஒரு பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டு அது பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து ட்ரம்ப், “நமது (அமெரிக்க) அதிபர் ஒபாமாவைவிட புதின் எவ்வளவோ சிறந்தவர்.  ரஷ்யாவை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறமைசாலி “என்று புகழாரம் சூட்டிவருகிறார்.

டொனால்ட் ட்ரம்ப்-  புடின்
டொனால்ட் ட்ரம்ப்- புடின்

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்கும் ரஷ்யவுக்கும் இணக்கமான உறவு நிலவும் என்ற நம்பிக்கை ஒருபக்கம் ஏற்பட்டாலும் சமீபகாலங்களாக அமெரிக்கா மீது ரஷ்யா தொடுத்திருக்கும் சைபர் யுத்தம் மேலும் உக்கிரமைடைந்துள்ளது. இந்த வேளையில்தான் ட்ரம்ப் இப்படி ரஷ்ய ஆதரவாளர்போல பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ட்ரம்ப்பின் போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனது ஈமெயில் சர்வரை ஹேக் செய்து பல முக்கியமான ஈமெயில்களை அழித்ததாக ரஷ்யாமீது அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. மேலும் அமெரிக்காவின் அரிசோனா இல்லியனாய்ஸ் போன்ற இடங்களில் நடந்த தேர்தல்களிலும் ரஷ்ய ஹேக்கர்கள் கைவரிசையை காட்டியதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.
இச்சூழலில் ட்ரம்ப்பின் ரஷ்ய திடீர் ரஷ்ய ஆதரவு பேச்சுக்கள் அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

More articles

Latest article