சென்னை; இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களின்  படகு 3மாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்பியது. அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம் அவர்களை  நிபந்தனையுடன் கடந்த 17ந்தேதி (மார்ச்)  விடுதலை செய்து உத்தர விடட்டது. ஆனால்,  மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு அந்நாட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில்,   நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நீங்கள்(பிரதமர்) உடனடியாக இதில் தலையிடவேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

மேலும்,   தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின்பேடி, 16 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2022 நவம்பரில்  பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின்   3 படகுகரைளயும் விடுவிக்க உத்தரவிட்டது.

அதன்படி, 3 மாதங்களுக்கு  பிறகு முதன்முறையாக, தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் மீண்டும் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.