ஆஸ்திரேலியாவில் குடிபுக உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்

Must read

கொழும்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆஸ்திரேலியாவில் குடிபுக உள்ளார்.

தற்போது 35 வயதாகும் இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உலகப் புகழ் பெற்றவர் ஆவார். இந்த உலகக் கோப்பை தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகியது ரசிகர்கள் பலருக்குத் துயரத்தை அளித்தது. ஆயினும் அவர் தனது ஓய்வு அறிவிப்பு எதையும் இது வரை வெளியிடவில்லை.

வங்கதேச கிரிக்கெட் அணி தனது இலங்கைச் சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியை வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மலிங்கா பங்கேற்க உள்ளார். தொடர் முடிவுக்குப் பிறகு தனது ஓய்வு குறித்த அறிவிப்பை அவர் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். உலகக் ப்பை போட்டிக்குப் பிறகு மலிங்கா ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

நாளை இலங்கைக்குத் திரும்ப உள்ள மலிங்கா தொடரில் கலந்துக்கொண்டு அதன் பிறகு ஓய்வு குறித்து அறிவிக்க உள்ளார். ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ள மலிங்கா அங்கு தாம் தங்குவதற்காக வீடு ஒன்றை வாங்கி உள்ளார். ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக அவர் பணி மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

More articles

Latest article