ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.
முதல் டெஸ்டை ஏற்கனவே இலங்கை அணி வென்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் விறுவிறுப்புடன் துவங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய முடிவெடுத்து, முதல் இன்னிங்ஸில் 406 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் 107 ரன்களை அடித்தார். பிரெண்டர் டைலர் அரைசதம் அடித்தார். இலங்கை தரப்பில் லசித் எம்பல்டேனியா 4 விக்கெட்டுகளையும், தனஞ்செயா டி சில்வா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆனால், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், இரண்டாம் இன்னிங்ஸை துவக்கிய 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து, இலங்கைக்கு 361 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆனால், தனது இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.
தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.