ராமேஸ்வரம்,

லங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற தமிழக காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடம் வந்தார்.

அங்கு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்பாக்கி சூட்டில் பலியான பிரிட்ஜோ குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே பேசியதாவது,

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு இலங்கை அரசு ரூ.1 கோடி தர வேண்டும் என்று கூறினார்.

மேலும், பிரிட்ஜோ குடும்பத்துக்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஏற்கனவே திருநாவுக்கரசர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தங்கச்சி மடம் பிரிட்ஜோவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.