இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

டில்லி:

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.

இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார். நடு வரிசை பேட்ஸ்மேனான கருண் நாயருக்கு பதில் ரோஹித் விளையாடுகிறார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் முரளி விஜய், கே.எல். ராகுல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதே போல் துணை கேப்டன் ரஹானே, அஸ்வின், புஜாரா, ஜடேஜா, ரோஹித் சர்மா, அபினவ் முகுந்த், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், சஹா, ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.


English Summary
srilanka test cricket indian players list announced