புவனேஸ்வர்

நேற்றுடன் புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து முடிந்த ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று முதல் இடத்துக்கு வந்தது.  சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா ஆசிய தடகளப் போட்டியில் 29 பதக்கங்கள் பெற்றுள்ளது.   மொத்தம் பெற்ற பதக்கங்கள் 12 தங்கம், 5 வெள்ளி, மற்றும் 12 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளது.  நேற்று மட்டும் 5 தங்கம், 1 வெள்ளி, மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.  சீனா மொத்தமாக 8 தங்கம், 7 வெள்ளி, மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளது.  நேற்று மட்டும் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

ஜப்பான் 1973 முதல் 1981 வரை அதிக பதக்கங்கள் பெற்ற நாடாக இருந்து வந்தது.  குவைத் சிடியில் 1983ல் நடந்த போட்டிகளில் இருந்து இதற்கு முந்தைய போட்டி வரை அதிக பதக்கங்களை சீனா தான் வென்று வந்தது.

அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக சாம்பியன் போட்டிகளுக்கு பலரும் தயாராகி வரும் நிலையில் இந்தியாவின் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கதாகும்.   பல வீரர் வீராங்களைகளின் சுபவீனத்தையும் தாண்டி இந்த வெற்றி கிடைத்துள்ளது.

800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அர்ச்சனா யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அந்த பதக்கம் இலங்கையை சேர்ந்த நிமாலிக்கு சென்றது.  அந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

நேற்று நடந்த போட்டிகளின் முடிவுகள் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை இருக்கை விளிம்புக்கே கொண்டு வந்தது.   அனைத்து இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சி கடலில் நேற்றைய வெற்றிகள் ஆழ்த்தியது