ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆட்டமிழந்து, விண்டீஸ் அணியைவிட 96 ரன்கள் பின்தங்கியது.
இதனையடுத்து, தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் விண்டீஸ் அணி, 69 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து, நான்காம் நாளின் உணவு இடைவேளை வரை, 165 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
விண்டீஸ் அணியில், கடந்த இன்னிங்ஸில் சதம் அடித்த துவக்க வீரர் பிராத்வெய்ட், இந்தமுறை 22 ரன்களோடு களத்தில் நிற்கிறார். கேம்ப்பெல் 10 ரன்களுக்கும், பிளாக்வுட் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தற்போது மேயர்ஸ் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், இப்போட்டியை எப்படியும் வென்று தொடரைக் கைப்பற்றிவிட வேண்டுமென்ற முனைப்பில் விண்டீஸ் அணி ஆடிவருகிறது.
இன்று அந்த அணி கணிசமாக ரன்குவித்து, இலங்கைக்கு 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கும் பட்சத்தில், வெற்றியை எளிதாக்கலாம்.