கொழும்பு:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீசாரின் வெறியாட்டத்துக்கு 13 அப்பாவிகள் பலியாகினர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் ஆங்காங்கே கண்டனம் தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் யாழ்ப்பாணத்தில், ஐக்கிய மக்கள் முன்னணி என்ற தமிழர்கள் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.