சென்னை

டிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் குஷி கபூர் நடிகர் சயீஃப் அலிகான் மகன் இப்ராகிம் அலி கானுடன் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமான நிலையில் அவரது மகன் ஆர்யன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வரிசையில் தற்போது, நடிகர் சயிப் அலி கானின் மகன் இப்ராகிம் அலி கான் நடிகராக அறிமுகமாக உள்ளார், கரண் ஜோஹர் தயாரிக்கும் “நாடானியன்” என்ற படத்தின் மூலம் இப்ராகிம் அலி கான் அறிமுகமாகிறார். “நாடானியன்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம்  மகளும், நடிகை ஜான்வி கபூரின் சகோதரியுமான குஷி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்ராகிம் அலி கானுடம் குஷி கபூர் நடிக்க உள்ளது அவரது மூன்றாவது படமாகும்.

குஷி கஒஊர் 2023-ல் வெளியாக “தி ஆர்ச்சீஸ்” திரைப்படத்தில் அறிமுகமானார்.  குஷி கபூரும், அமீர் கானின் மகன் ஜுனைத் கானும் நடித்துள்ள “லவ்யப்பா” படம் வருகிற 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.